‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம்
துல்கர் சல்மான், பாக்ய போர்சே, சமுத்திரக்கனி, ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.
சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் துல்கர் சல்மான் பேசியபோது,
“இந்தக் கதையை 2019-ல் கேட்டவுடனே இதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநராக செல்வமணி செல்வராஜ் திகழ்கிறார்.
‘அய்யா’ கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி அவர்களே மிகப்பொருத்தமானவர். இப்படம் எனக்கு டைம் டிராவல் அனுபவம் போல் இருந்தது,”
என்று தெரிவித்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறியதாவது:
“1950களின் சமூகப் பின்னணியில் வாழ்ந்த ஆளுமைகள் மற்றும் அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டங்களை திரைக்கதை வடிவில் வடிவமைத்தேன். சினிமாவை நேசிக்கும் குழுவின் ஒற்றுமையால்தான் இது சாத்தியமானது,”
என்று தெரிவித்தார்.
விழாவில் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.