ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில்

Date:

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில்

உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணி 8 வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடரு, இத்தாலியின் துரின் நகரில் நவம்பர் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடருக்கான டிரா நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒற்றையர் பிரிவில் 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரிவு: ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினர் இடம் பெற்றுள்ளனர்.

பிஜோர்ன் போர்க் பிரிவு: நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடைசி இடத்தைப் பெற கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி இடையே போட்டி உள்ளது. தற்போதைய தரவரிசையில் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் 8-வது இடத்தில் உள்ளார்; ஆனால், அதன் வார இறுதியில் ஏதன்ஸ் டென்னிஸ் தொடரில் முசெட்டி வென்றால் அவர் 8-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இரு பிரிவிலும் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறுவர். இறுதி ஆட்டம் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ — ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வைப் சாங்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ — ரசிகர்களை...

“நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?” – பணத்தை இழந்த திரிணமூல் எம்.பி கேள்வி

“நாட்டில் சைபர் மோசடி தடுப்பு பிரிவு இல்லாதது ஏன்?” – பணத்தை...

பாகிஸ்தான்–ஆப்கன் பேச்சு தோல்வி: “போருக்கு தயார்” – தலிபான் எச்சரிக்கை

பாகிஸ்தான்–ஆப்கன் பேச்சு தோல்வி: “போருக்கு தயார்” – தலிபான் எச்சரிக்கை துருக்கியின் இஸ்தான்புல்...

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் –...