பிரான்சில் வெடித்த ‘அனைத்தையும் முடக்குவோம்’ போராட்டம் – 200 பேர் பிடிப்பு

பிரான்ஸ் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில், ‘அனைத்தையும் முடக்குவோம்’ என்ற இயக்கம் செயல்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட சுமார் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் பிரான்சுவா பேய்ரு தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதையடுத்து பேய்ரு ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நியமித்தார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க சமூக வலைதளங்கள் மூலம் ‘அனைத்தையும் முடக்குவோம்’ என்ற இயக்கம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.

அதிபர் மேக்ரோனுக்கும், புதிய பிரதமருக்கும் எதிராக தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த இயக்கம் எவரும் தலைமையிலில்லாமல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு 80,000 போலீஸாரை பாதுகாப்புப் பணிக்கு நிறுத்தியது.

போராட்டக்காரர்கள் பாரிஸின் முக்கிய வளையச் சாலையை மறிக்க முயன்றனர். சாலைகளில் தடுப்புகள் அமைத்து, காவலர்கள்மீது கற்கள் வீசினர். ரென் நகரில் ஒரு பேருந்துக்கு தீவைத்தனர். எனினும் நிலைமை மோசமடையாமல் தடுத்த போலீஸார், சுமார் 200 பேரை கைது செய்தனர்.

Facebook Comments Box