செப். 9ல் ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் – சிஇஓ டிம் குக் தகவல்
ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 9-ம் தேதி பிரத்யேக நிகழ்வு நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இதில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் மற்றும் பல டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17, 17 புரோ, 17 புரோ மேக்ஸ் மற்றும் 17 ஏர் என நான்கு மாடல்கள் உள்ளன. இவை iOS 26 இயங்குதளத்தில் வெளியிடப்பட உள்ளன. ஐபோன் 17 ஏர் புதிய வேரியன்ட்டாக அறிமுகமாக உள்ளது; இந்த முறை ஐபோன் பிளஸ் வேரியன்ட் இல்லை. 17 புரோ மற்றும் 17 புரோ மேக்ஸ் போன்களில் கேமரா Module ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 17 மாடல்களின் விலை முன்னையதைவிட அதிகமாக இருக்கும்; இந்திய ரூபாயில் ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல். இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஏர்பாட்ஸ் புரோ 3 மற்றும் ஆப்பிள் இண்டலிஜென்ஸ் அப்டேட் உடன் அறிமுகப்பட உள்ளன.
“செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை நடைபெறும் அற்புதமான நிகழ்வுக்கு தயாராகுங்கள்” என ஆப்பிள் சிஇஓ டிம் குக் குறிப்பிட்டார். இந்திய நேரப்படி நிகழ்வு இரவு 10:30 மணிக்கு தொடங்கும்.