பூண்டி ஏரியில் செல்ஃபி எடுக்க முயற்சி — படகில் இருந்து தவறி விழுந்து இளைஞர் மாயம்
சென்னை பூண்டி ஏரியில் மீன்பிடி படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்றபோது தவறி நீரில் விழுந்த இளைஞர் மாயமானார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரியில், வடகிழக்கு பருவமழையால் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ஏரி நிறைவடைந்ததால், உபரிநீர் கொசஸ்தலை ஆற்றுக்கு விடப்படுகிறது. இந்த காட்சி பொதுமக்களை ஈர்த்துள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் வந்து நீர் வெளியேறும் காட்சியை ரசித்து வருகின்றனர்.
அவ்வாறு, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யாசின் (22) தனது மூன்று நண்பர்களுடன் முன்சென்று பூண்டி ஏரிக்கு வந்தார். பின்னர், அவர்களுடன் மீன்பிடி படகில் ஏரிக்குள் சென்று சுற்றிப் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, யாசின் செல்ஃபி எடுக்க முயன்றபோது திடீரென சமநிலை தவறி நீரில் விழுந்தார். நண்பர்கள் உதவ முனைந்தாலும் அவரை மீட்க முடியவில்லை.
தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் தேடினார். இருள் காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால் நேற்று மாலை வரையும் யாசின் முடிகவில்லை என தெரிகிறது. இன்று மீண்டும் தேடுதல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ சம்பவம் தொடர்பாக பென்னலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.