ஜவ்வாதுமலை பழமையான சிவன் கோயிலில் தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்பாரா முறையில் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த சிவன் கோயில் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்தது. தமிழக அரசு ரூ.2.49 கோடி நிதி வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது கோயிலில் புதுப்பிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நேற்று காலை திருமூலநாதர் கருவறை பகுதியில் பணியாளர்கள் பள்ளம் தோண்டும் போது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய மண் பானை கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் திறந்தபோது, அதில் 103 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக தகவல் பெறந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து நாணயங்களை கைப்பற்றி, செயல் அலுவலர் சிலம்பரசனிடம் ஒப்படைத்தார். தற்போதைக்கு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தங்க நாணயங்கள் எந்த காலத்தைச் சேர்ந்தவை? சோழர்காலமா அல்லது பின்னர் காலத்தின்பதாகமா என்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.