நவம்பர் 20ல் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நவம்பர் 20ம் தேதி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், “இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் மிகுந்த குறைவாக உள்ளன. இதுகுறித்து அரசின் கவனத்தை ஈர்க்க திமுக அரசை கண்டித்து நவம்பர் 20ம் தேதி நான் தலைமையேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெறும்,” என தெரிவித்தார்.