மதுரையின் சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண கட்சி தொடங்கிய சங்கரபாண்டியன்!

Date:

மதுரையின் சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண கட்சி தொடங்கிய சங்கரபாண்டியன்!

அரசியலை பலர் “சாக்கடை” என்று விமர்சித்து விலகி நிற்கும் நிலையில், மதுரையில் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் அதையே முக்கியக் கருத்தாகக் கொண்டு “தமிழ்நாடு சாக்கடை ஒழிப்பு கட்சி” என்ற அரசியல் கட்சியை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

2021 சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 160 வாக்குகளும், 2024 மக்களவைத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் 1,060 வாக்குகளும், அதற்கு முன்பு மதுரை மாநகராட்சித் தேர்தலில் 235 வாக்குகளும் பெற்றவர் சங்கரபாண்டியன்.

இப்போது புதிய கட்சியை பதிவு செய்து சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். கட்சியில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

சங்கரபாண்டியன் கூறியதாவது:

“அரசியல் சாக்கடை என்று சொல்லி மக்கள் விலகுகிறார்கள். ஆனால் மதுரையில் சாக்கடை பிரச்சினை ஆண்டாண்டுக்காலமாக தீராத துன்பமாக உள்ளது. எந்தக் கட்சியும் இதை சரி செய்யவில்லை. இந்த பிரச்சினையைப் பற்றி மக்கள் கவனம் செலுத்த வைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் இந்தக் கட்சியை ஆரம்பித்தேன். சாக்கடை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக பசியை தீர்த்த மனிதர் எம். எஸ். சுவாமிநாதன் – வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டில் கமல்ஹாசன் புகழாரம்

உலக பசியை தீர்த்த மனிதர் எம். எஸ். சுவாமிநாதன் – வாழ்க்கை...

டி20-யின் சிறந்த பவுலருக்கும் இந்த நிலை! மீண்டும் தன்னை நிரூபித்த அர்ஷ்தீப் சிங்

“டி20-யின் சிறந்த பவுலருக்கும் இந்த நிலை! மீண்டும் தன்னை நிரூபித்த...

தமிழகம்: 59 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

தமிழகம்: 59 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் தமிழக காவல் துறையில் நிர்வாகத் தேவைகள்,...

’சூர்யா 47’ அப்டேட்: நஸ்லின் ஒப்பந்தம்

’சூர்யா 47’ அப்டேட்: நஸ்லின் ஒப்பந்தம் ஜீத்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’...