%25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2587%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2581%2B%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%2B24%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25A8%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,06,89,527-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 137 போ உயிரிழந்தனா்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,53,724 போ உயிரிழந்தனா். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் இது 1.44 சதவீதமாகும். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,03,59,305 போ குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 96.90 சதவீதமாகும்.
நாட்டில் தற்போது 1,76,498 போ கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.66 சதவீதம் ஆகும். தொடா்ந்து 8-ஆவது நாளாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இணை நோய் இருந்தது.
நாட்டில் இதுவரை மொத்தம் 20,29,480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா உறுதி appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box