ரிசர்வ் வங்கி, வட்டி குறைப்பு எதையும் அறிவிக்காமல், தற்போதைய நிலையே தொடரவே அதிக வாய்ப்பிருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, ‘பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் எம்.கோவிந்த ராவ் கூறியதாவது:இந்த முறையும், ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு, வட்டி குறைப்பு எதையும் அறிவிக்காது என்றே கருதுகிறோம். உணவு பொருட்களின் விலை குறைந்ததை அடுத்து, பணவீக்கமும் குறைந்துள்ளது.
இருப்பினும், அடிப்படை பணவீக்கம் இன்னும் குறையவில்லை. தடுப்பூசிகள் வரவு, பேரியியல் பொருளாதாரத்தில் உடனடியாக எந்த விளைவுகளையும் ஏற்படுத்தி விடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான, ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கை குழுவின் கூட்டம், நாளை துவங்குகிறது. 5ம் தேதி அன்று, அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.தற்போதைய ரெப்போ வட்டி விகிதம், 4 சதவீதமாக உள்ளது. கடந்த பிப்ரவரியிலிருந்து இதுவரை, 1.15 சதவீதம் அளவுக்கு, வட்டி குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு, வரும், 5ம் தேதியன்று, வட்டி குறித்த அறிவிப்பு வெளியீடு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box