பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் | ஆடி மாத விசேஷம்

தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரத்தில் அருள்பாலிக்கும் அன்னை துர்க்கையம்மன், அஷ்டபுஜங்களுடன் வலம் வரும் விஷ்ணு துர்க்கை, துர்கா லட்சுமி, நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவக்கிரஹ நாயகி, நவராத்திரி நாயகி மற்றும் நவகோடி நாயகி எனப் போற்றப்படுகிறார்.

சோழ மன்னர்கள், குறிப்பாக ராஜராஜசோழன், முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, போரில் வெற்றி பெறும் நேரங்களில் இந்த துர்க்கையம்மனின் அருள்வாக்கை பெற்றனர்.

சோழ மன்னர்களின் ஆட்சி முடிவுற்று, சோழன் மாளிகைகள் அழிந்த பின்னரும், துர்க்கையம்மன், விநாயகர், சண்முகர், பைரவர் ஆகிய நான்கு தெய்வங்களை பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்தனர். கோயிலின் வடக்கு வாயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள துர்க்கையம்மன், பக்தர்களைக் காக்கும் அன்னையாக, சாந்தம் நிறைந்த முகத்துடன் வலம் வருகிறது.

துர்க்கையம்மன் மகிஷன் தலை மீது நின்ற கோலத்துடன், சிம்ம வாகனத்தில் முக்கண்களுடன், 8 திருக்கரங்களுடன், காதுகளில் குண்டலங்களுடன் அருள்பாலிக்கிறார். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கிய நிலையில், இத்தலத்தில் அம்மன் சாந்தி நிறைந்த இடப்புற நோக்கில் அமைந்துள்ளார்.

அபயக் கரத்துடன், சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி போன்ற ஆயுதங்களைத் தாங்கி துர்க்கை அருள்பாலிக்கிறார். “தன்னைச் சரணடைவோருக்கு வேண்டுவதை வழங்குவாள் துர்க்கை” என்பது இத்தலத்தின் ஐதீகம். பரசுராமர் துர்காம்பிகையை துதி செய்து அமரத்துவம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆடி மாதம், இம்மணியான் துர்க்கையம்மனின் வழிபாடு சிறப்பாக நடைபெறும் காலமாகும்.

Facebook Comments Box