டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!
புதுடெல்லி:
டெல்லி மாளவியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து தலைமறைவாக இருந்து வந்த அந்த ஹோட்டல் கட்டடத்தின் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை முற்றிலுமாக மீறி, வெறும் 6 அறைகள் மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்ட இடத்தில் 25 அறைகள் வரை சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்ததும், விபத்து சமயத்தில் தப்பிப்பதற்கான அவசர கால வழி (Emergency Exit) இல்லாததுமே இந்த பெரும் உயிர்ச்சேதத்திற்குக் முக்கியக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த கோர விடுபத்து மற்றும் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லி முழுவதும் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் அனைத்து விதிமீறல் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க டெல்லி மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.






