“வங்கதேச ஊடுருவல்காரர்கள் நாடு கடத்தப்படுவது உறுதி” – ‘கண்டறி, நீக்கு, வெளியேற்று’ திட்டத்தின் கீழ் மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு!
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள் அனைவரும் அண்டை நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவது உறுதி என்று அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்குவங்க எல்லையோரப் பகுதிகளில் அதிகரித்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, “மாநிலத்தில் இனிமேல் கைது செய்யப்படும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் யாரும் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட மாட்டார்கள்; அதற்குப் பதிலாக அவர்கள் நேரடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக எல்லைக்கு அப்பால் திருப்பி அனுப்பப்படுவர்” என்று அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார். மாநில அரசின் ‘கண்டறி, நீக்கு, வெளியேற்று’ (Identify, Track and Deport) என்ற புதிய விரிவான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த நேரடி நாடு கடத்தல் முறை தற்போதிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கை எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது






