பிரதமர் மோடி வேண்டுகோள்
தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது புனிதமான ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் திரண்டு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
நடப்புத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் முன்வந்து சாதனை அளவிலான வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜனநாயகத் திருவிழாவில் தமிழகம் புதிய மைல்கல்லை எட்ட வழிவகை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.




