“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது” – மக்களவையில் தேஜஸ்வி சூர்யா காட்டம்!
மக்களவையில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். நாட்டின் மக்கள் தொகை கடந்த 1971-ஆம் ஆண்டில் 55 கோடியாக இருந்த நிலையில், தற்போது 2026-இல் 140 கோடியைத் தாண்டிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாறிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பத் தொகுதி மறுவரையறை செய்யாவிட்டால், மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்க இயலாது என்றும், அது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டில் பிரிவினைவாதம் பற்றிப் பேசுவது திமுகதான் என்று விமர்சித்த தேஜஸ்வி சூர்யா, தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுகவினர் பரப்பி வரும் தவறான தகவல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திமுகவினர் இது குறித்து ஏன் இவ்வளவு கூச்சலிடுகிறார்கள் மற்றும் அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்பதைப் பார்த்தால், அது வெறும் அரசியல் நாடகமும், முதலைக் கண்ணீரும் மட்டுமே என்பது தெளிவாகிறது என்று அவர் தனது உரையில் சாடினார்.




