“8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி உறுதி” – ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடிப் பேச்சு!
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், தனது தொகுதிக்குட்பட்ட ஆட்டுத்தொட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த குத்துச்சண்டை வீரர்களிடம் வாக்கு சேகரித்த அவர், திமுகவினரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தேர்தல் களத்தில் திமுகவினர் 8,000 ரூபாய் மதிப்பிலான போலி கூப்பன்களை பொதுமக்களுக்கு விநியோகித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். “திமுகவினர் 8,000 ரூபாய் அல்ல, 8 லட்சம் ரூபாய் கூப்பன் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்; தமிழகத்தில் திமுக தோல்வி அடைவது உறுதி” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், திமுகவின் இத்தகைய தேர்தல் தந்திரங்களை மக்கள் முறியடிப்பார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.





