தமிழக பாஜக தொண்டர்களின் கடின உழைப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி: நாளை முக்கியக் கலந்துரையாடல்!
தமிழகத்தில் திமுக அரசின் மோசமான ஆட்சி நிர்வாகத்தை மக்களிடையே அம்பலப்படுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களை நினைத்துத் தான் பெருமைப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கொண்டுள்ள தொலைநோக்குச் சிந்தனைகளை பாஜகவினர் மக்களிடம் மிகச் சிறப்பாக எடுத்துரைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் அடிமட்ட அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், “எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் களப்பணியாற்றி வரும் கடின உழைப்பாளிகளான பாஜக தொண்டர்களுடன் நாளை அவர் நேரலையில் கலந்துரையாட உள்ளதாகவும் அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.




