திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!
திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகைபேர் அருகே ஆர்ஷவித்யா சமாஜத்தின் புதிய தமிழ்நாடு செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் கண்டிகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தின் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஆர்ஷவித்யா சமாஜத்தின் இயக்குநர் ஆச்சார்யா கே.ஆர். மனோஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகத் தர்மரக்ஷண சமிதி மாநில பொதுச் செயலாளரும் அறங்காவலருமான கணபதி கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி புதிய மையத்தைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
விழாவில் தர்மரக்ஷண சமிதி அறங்காவலர் மற்றும் பயிற்சிப் பொறுப்பாளர் பாண்டியன், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இந்தச் செயல்பாட்டு மையம் இப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




