குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: ராமநாதபுரம் வாலிபர் பலி!
ஈரானில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நீடித்து வரும் சூழலில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்தியத் தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
விசாரணையில், உயிரிழந்தவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடந்த இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, சந்தன செல்வத்தின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்தியத் தூதரகம் தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.




