போதை ஊசி மற்றும் மருந்து விற்பனை: குமாரபாளையத்தில் 6 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதை ஊசி மற்றும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை மயானப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சிபி ஹரிஷ், திருநாவுக்கரசு, ஸ்ரீனிவாசன், வசந்த், கார்த்தி மற்றும் ஹக்கீம் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவர்களின் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் அவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்ற போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






