ஜெயங்கொண்டம் திமுகவில் விரிசல்: வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக மேற்கு ஒன்றிய செயலாளர் போர்க்கொடி!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகக் கண்ணன் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இம்முறை தமக்குச் சீட் கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்த்து நேர்காணலுக்குச் சென்றிருந்த நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த தன.சேகர் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமக்குச் சீட் கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் சிவசங்கர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரே முழு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
கட்சியை வளர்ப்பதை விட அழிப்பதையே அவர்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகவும், கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பளிக்காமல் பணபலம் உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தது ஜெயங்கொண்டம் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






