ராணிப்பேட்டை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விவசாய நிலத்தில் விழிப்புணர்வு – வைரலாகும் ட்ரோன் காட்சிகள்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழாந்துறை கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
விவசாய நிலத்தில் விழிப்புணர்வு:
கீழாத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகலா கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, விவசாய நிலத்தையே விழிப்புணர்வுப் பலகையாக மாற்றி, பயிர்களைக் கொண்டு “VOTE 100% APR 23 RPT” என்ற ஆங்கில வாசகத்தை மிக அழகாக வடிவமைத்திருந்தனர்.
வைரலாகும் ட்ரோன் காட்சிகள்:
விவசாய நிலத்தில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்த இந்த வாசகங்களை ட்ரோன் மூலம் படம் பிடித்து வெளியிட்டனர். அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகிப் பயிர்கள் மூலம் தேர்தல் தேதியை (ஏப்ரல் 23) நினைவுபடுத்தும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த நூதன முயற்சியைப் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வேளாண்மைத்துறையின் இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடு வாக்காளர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.








