திருப்பூர்: விற்பனைக்காகப் பதுக்கப்பட்ட 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் அதிரடிப் பறிமுதல்!
திருப்பூரில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர்களை அதிகாரிகள் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். திருப்பூரை அடுத்த சாமுண்டிபுரம், தாய் மூகாம்பிகை நகர் பகுதியில் அதிகப்படியான சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக அந்த சிலிண்டர்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்க இத்தகைய சோதனைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.







