நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சுவாமி தரிசனம்!
நாமக்கல்லில் உலகப்புகழ் பெற்ற பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று தனது குடும்பத்தினருடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை என்பதால் கோயிலில் வழக்கத்தை விடப் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்களோடு வரிசையில் நின்று மத்திய அமைச்சர் சாமி தரிசனம் செய்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வழிபாட்டிற்குப் பின் அவர் தனது குடும்பத்தினருடன் கோயிலைச் சுற்றி வந்து ஆஞ்சநேயரின் அருளைப் பெற்றார்.