கொலம்பியா வரலாற்றில் சாதனை: ரூ. பல ஆயிரம் கோடி மதிப்பிலான 17 டன் கொக்கைன் பறிமுதல்!

Date:

கொலம்பியா வரலாற்றில் சாதனை: ரூ. பல ஆயிரம் கோடி மதிப்பிலான 17 டன் கொக்கைன் பறிமுதல்!

கொலம்பியா நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 17 டன் கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மெக்சிகோ, பிரான்ஸ், எல்.சால்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்தச் சர்வதேச கூட்டு நடவடிக்கையின் மூலம் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் சிக்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் வெற்றி குறித்துப் பேசிய கொலம்பியா அதிபர் பெட்ரோ, “சர்வதேச நாடுகளுக்கிடையே முறையான ஒத்துழைப்பு இருந்தால், போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களை வேரோடு ஒழிக்க முடியும் என்பதற்கு இந்தச் சம்பவமே மிகச்சிறந்த சான்று” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது” – சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அதிரடி!

"ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது" - சென்னை ஐஐடி இயக்குநர்...

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23-ல் கூட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம்: முருக பக்தர்கள் பேரவை அழைப்பு!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23-ல் கூட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம்:...

லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: NIA அறிவிப்பு

லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம்...

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: செங்கல்பட்டு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்!

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: செங்கல்பட்டு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம்...