சூழலை கருத்தில் கொண்டு இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சர்வதேச சூழல், எண்ணெய் இருப்பு மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு தான் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி இந்தியா ரஷ்யாவிற்கு பதிலாக வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா தனது பொருளாதார தேவைகள், எண்ணெய் கையிருப்பு நிலை மற்றும் உலக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தான் எண்ணெய் இறக்குமதி முடிவுகளை எடுக்கும் என கூறினார்.
மேலும், எந்த ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல், பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவை பேணுவதே இந்தியாவின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.