நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயார்
நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த, கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் , இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளால் இந்தியா–கனடா இடையேயான இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவ்வழக்கில் இதுவரை 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஒட்டாவாவிலுள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தினேஷ் பட்நாயக் கூறுகையில், “நிஜ்ஜார் கொலையில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் உண்மை கண்டறிய கனடாவுடன் இணைந்து செயல்பட இந்தியா முனைப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.