₹1.60 லட்சம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதிய உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் சுமார் ₹1,60,504 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத் தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி துறைகளில் முக்கிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் கோபூர்–நுமலிகர் இடையே ஆற்றுக்குக் கீழ் சுமார் 15 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச் சாலை மற்றும் இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தற்போதைய 240 கிலோமீட்டர் பயணத் தூரம் 34 கிலோமீட்டராகக் குறையும்; 6 மணி நேரப் பயணம் சுமார் 20 நிமிடங்களாகச் சுருங்கும் என கூறப்பட்டது.
மேலும், ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் மூன்று முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்கப்படும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தொழில் நகரங்களின் மேம்பாட்டிற்காக ₹1 லட்சம் கோடி மத்திய நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மற்றும் புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில் ₹10,000 கோடி மதிப்பிலான தனித்திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.