“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக விமர்சிப்பு
நடிப்பு முதல் அரசியல் வரை காப்பியடிப்பு என குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜயை குறிவைத்து அதிமுக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி பிரிவு வெளியிட்ட அறிக்கையில், நடிகராக இருந்த காலத்திலேயே விஜய், ரஜினி மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் பாணியை பின்பற்றியதாகவும், தற்போது அரசியலிலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் மரபை ‘ஸ்டிக்கர்’ போல ஒட்டிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், விஜய் நடித்த திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் ரூ.2,000 வரை விற்பனையானது கொள்ளை அல்லவா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன், பிற கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைத்து, கட்சி என்ற பெயரில் ஒரு ‘வாட்ஸ்அப் குழு’ போன்று அமைப்பை நடத்தி வருகிறார் எனவும் அதிமுக ஐடி பிரிவு அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தவெக தரப்பில் இதுவரை பதில் வெளியாகவில்லை.