“அன்று நான் போட்ட அரசியல் வெடிகுண்டு இன்று வெடித்து சிதறுகிறது” ஸ்டாலின் மீது விஜய் கடுமையாக விமர்சனம்

Date:

சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி மாநாட்டில் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” வழங்குவேன் என்று கூறியதன் தாக்கம் தற்போது அரசியல் கூட்டணிகளில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். “ஆட்சியில் பங்கு வழங்குவது தமிழகத்தில் சாத்தியமில்லை” என ஸ்டாலின் பதற்றமடைந்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். அவரின் பார்வையில் வெற்றி பெறுவதற்காக மட்டும் கூட்டணி; மற்ற எல்லா விஷயங்களிலும் தனி அணியே செயல்படுகிறது எனவும் விமர்சித்தார்.

தனது அரசியல் வருகையை சிலர் விமர்சிப்பதாக கூறிய விஜய், மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் அனுமதி, பாதுகாப்பு தமக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். கூட்டம் நடத்துவதற்கான நடைமுறைகள் தமக்கு மட்டும் கடுமையாக விதிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் பணம் வழங்கி வாக்குகளை பெறும் பழக்கம் ஒழிய வேண்டும் எனவும், பணத்தை வாங்கிக்கொண்டாலும் வாக்கை மனசாட்சிப்படி செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். தி.மு.க. ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த அவர், மக்கள் அதனை நிராகரிப்பார்கள் என தெரிவித்தார்.

“அரசியலில் அனுபவம் இல்லை” என்ற குற்றச்சாட்டை எதிர்த்து, நல்லாட்சி வழங்க மக்களை நேசிக்கும் மனப்பான்மை இருந்தாலே போதுமானது என்றார். தனியாக கட்சி தொடங்கி செல்வாக்குடன் வளர்ந்து வருகிறோம் என்றும், அடுத்த தேர்தல் போட்டி தமக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயானது என்றும் கூறினார்.

பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் அரசு தோல்வியடைந்துள்ளது என்றும், நிரந்தர டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆட்சிக்கு வந்தால் நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளையே வழங்குவோம்; மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது முதல் கடமையாக இருக்கும் என்றார்.

மேலும், சமீபத்தில் பெண்களுக்கான உரிமைத்தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்ட விவகாரத்தையும் அவர் குறிப்பிட்டார். கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 திடீரென அறிவிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். வழக்கமாக 15ஆம் தேதி வழங்கப்படும் தொகை 13ஆம் தேதியே வரவு வைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்றும் விமர்சித்தார். தனது அரசியல் வருகையின் தாக்கத்தாலேயே இந்த தொகை வழங்கப்பட்டதாகவும், பெண்கள் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிக்கையில் தெரிவித்தார்.

சமீபகாலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி குறித்து விமர்சனம் செய்திருந்தாலும், சேலம் கூட்டத்தில் அவற்றைப் பற்றி குறிப்பிடாமல், தி.மு.க.வையே முக்கிய எதிரியாகக் கருதுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக விமர்சிப்பு

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக...

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல்துறை எச்சரிக்கை

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் –...

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன்...

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள்...