மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமருக்கு ஓவியம் வழங்கிய சிறுமிக்கு அண்ணாமலை பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஓவியம் வழங்கிய சிறுமியை, பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த மாதம் 23ஆம் தேதி மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் மோடியின் தாயாரின் உருவத்தை தானே வரைந்த ஓவியமாக வழங்கினார்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அந்த சிறுமியை நேரில் சந்தித்து, அவரது திறமைக்கு வாழ்த்து தெரிவித்தார்