“வாக்களிக்கவில்லை என்றால் தெய்வம் தண்டிக்கும்” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு சர்ச்சை
வாக்குறுதி அளித்தபடி வாக்களிக்கவில்லை என்றால் தெய்வம் தண்டிக்கும் என அமைச்சர் துரைமுருகன் வாக்காளர்கள் முன்னிலையில் பேசியது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் தெய்வம் தன்னை தண்டிக்கும் என தெரிவித்தார்.
அதே நேரத்தில், உறுதியளித்தும் வாக்களிக்காமல் இருந்தால் தெய்வம் உங்களை தண்டிக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன.