எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அதை தோல்வியாக கருத வேண்டாம் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை
எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறவில்லை என்றாலே அதை தோல்வி என எண்ணிக் கொள்ளக் கூடாது என்று, மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.
தேர்வு எழுதும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கில், ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அங்கு மாணவர்களுடன் உரையாடிய அவர், வாழ்க்கையில் சில நேரங்களில் எண்ணியபடி விஷயங்கள் நடக்காமல் போகலாம். அதற்காக மனம் உடைந்து அதை தோல்வி என்று கருத வேண்டிய அவசியமில்லை என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.