தொழில் போட்டியால் 14 வயது சிறுவன் தாக்குதல் – சேலத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்

Date:

தொழில் போட்டியால் 14 வயது சிறுவன் தாக்குதல் – சேலத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில், குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பானிபூரி விற்பனை செய்து வந்த 14 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன், பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், பெற்றோரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், இரவு நேரங்களில் பானிபூரி விற்று குடும்பத்திற்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறுவனின் விற்பனை இடத்திற்கு அருகே தள்ளுவண்டியில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வந்த சிலர், தொழில் போட்டி காரணமாக சிறுவனை தாக்கியதாக தெரிகிறது.

தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், சமூக ஆர்வலரிடம் கண்ணீருடன் நடந்தவற்றை கூறும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சிறுவனை தாக்கியவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா! நாமக்கல்...

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு மத்திய...

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு செயற்கை நுண்ணறிவு துறையில்...

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி வேண்டுகோள்

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி...