தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி ஆலயத்தில் தை உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது
தென்காசி மாவட்டம் புளியரை அருகே அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி ஆலயத்தில், தை உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.
புளியரை பகுதியில் உள்ள இக்கோயிலின் தட்சிணாமூர்த்தி சன்னதியில், கடந்த 31ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தை உத்திர விழா ஆரம்பமானது. விழா நாட்களில்தோறும் குருவிற்கான விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய அம்சமாக அமைந்த தவசு காட்சி நிகழ்ச்சியை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மிகுந்த ஆன்மிக எழுச்சியுடன் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடத்தப்பட்டது.
பின்னர், சுவாமி மற்றும் அம்பாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இந்த ஆன்மிக நிகழ்ச்சிகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.