• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

கருணாநிதி வெளியிட்ட அரசாணை 354-ஐ உடனே அமல்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 📋

கருணாநிதி வெளியிட்ட அரசாணை 354-ஐ உடனே அமல்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசாணை எண் 354-ஐ தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக காத்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related posts

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், இன்று திட்டமிட்ட வகையில் அரசு மருத்துவர்களின் குரலை அடக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்த அரசு மருத்துவர்கள், தற்போது தங்களுக்குரிய ஊதியத்திற்காகவே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், தேசிய மருத்துவ அமைப்பின் வழிகாட்டுதல்களையும் கூட திமுக அரசு மதிக்காமல் இருப்பதாக கூறிய அண்ணாமலை, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய நான்கு ஊதிய உயர்வுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், DACP ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு மாற்றாக, மருத்துவர்களை கைது செய்தல், பணியிட மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அவர்களை தண்டித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்கு இதுவரை அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், போராட்டத்தின் போது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் மணிக்குமாரின் குடும்பத்துக்கு மலர் வளையம் வைத்ததோடு அரசின் நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் அதோடு முடிவடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தமிழக பாஜக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்ததாக நினைவுபடுத்திய அண்ணாமலை, மக்கள் நலனும் மருத்துவர்களின் நலனும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என தெரிவித்தார்.

ஆனால், திமுக அரசு தொடர்ந்து அரசு மருத்துவர்களை அவமதித்து வருவதாகவும், இதனால் தமிழக மக்களின் ஆரோக்கியமே பாதிக்கப்படுவதை கூட முதல்வர் ஸ்டாலின் உணரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உடனடியாக அரசாணை எண் 354 அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர் மணிக்குமாரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசு மருத்துவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பொறாமை உணர்வு அறிவை மங்கச் செய்து காங்கிரஸை வரலாற்றுப் பிழை செய்ய வைத்தது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Next Post

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

Next Post

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026
“முதலமைச்சர் ஆன்மீகவாதியாக இருப்பதை விட தேசியவாதியாக இருக்க வேண்டும்” – புதுச்சேரி அமைச்சரவை தாமதம் குறித்து தவெக எம்.எல்.ஏ சாய் சரவணன் சாடல்!

“முதலமைச்சர் ஆன்மீகவாதியாக இருப்பதை விட தேசியவாதியாக இருக்க வேண்டும்” – புதுச்சேரி அமைச்சரவை தாமதம் குறித்து தவெக எம்.எல்.ஏ சாய் சரவணன் சாடல்!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
  • ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!
  • “முதலமைச்சர் ஆன்மீகவாதியாக இருப்பதை விட தேசியவாதியாக இருக்க வேண்டும்” – புதுச்சேரி அமைச்சரவை தாமதம் குறித்து தவெக எம்.எல்.ஏ சாய் சரவணன் சாடல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

திருச்செங்கோடு தேர்த்திருவிழா விபத்து: உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ₹5 லட்சம் இழப்பீடு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மே 31, 2026
ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

ஆன்லைன் ‘மீம்’ முதல் மதுரைப் பேரணி வரை: புதிய அரசியல் கட்சியாகப் பதியப்படும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP)!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN