என்.டி.ஏ., இண்டி கூட்டணி இருபுறமும் அழுத்தம் – முதல்வரை விமர்சித்த தமிழிசை
பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், பல தேசிய அரசியல் தலைவர்கள் தமிழகத்துக்கு வரவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை கிண்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தமிழகத்திற்கு எதிராக இருப்பது போன்ற தவறான எண்ணத்தை உருவாக்க முதல்வர் திட்டமிட்டு செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் வரலாற்றுச் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியவர் பிரதமர் மோடி தான் என்றும், சோழப் பேரரசின் மாபெரும் மன்னர் ராஜேந்திர சோழனை நேரில் சென்று மரியாதை செய்ததும் பிரதமர் மோடியே எனவும் அவர் நினைவுபடுத்தினார்.
பிரதமரின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் வருகைகள் முதல்வரை குழப்ப நிலைக்குத் தள்ளியுள்ளதாக கூறிய தமிழிசை, தற்போது அவருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியாலும் (NDA) எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணியாலும் ஒரே நேரத்தில் அரசியல் அழுத்தம் உருவாகி உள்ளதாக விமர்சனம் செய்தார்.