சோழர்–பாண்டியர் மரபை அவமதிக்கும் வகையில் திருமாவளவன் பேச்சு – அண்ணாமலை கண்டனம்
திருமாவளவன் ஆற்றிய கருத்துகள், சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்றுச் சிறப்பையும் பெருமையையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்த திமுக ஆட்சியில் நிகழும் அனைத்து பிரச்னைகளுக்கும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளையே தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த திருமாவளவன், இப்போது 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி சென்று, தமிழரின் மாபெரும் பேரரசர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களை அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற பெயர்கள் தமிழ் பெயர்களா என கேள்வி எழுப்புபவர்கள், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட கோபாலபுரம் குடும்பத்தினரின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்றும் கேட்க வேண்டிய நிலை வரும் எனவும் அவர் சாடியுள்ளார்.
திருமாவளவனின் இந்த பேச்சுகள், அவரது வரலாற்று அறிவின்மையையே வெளிப்படுத்துகின்றன என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.