கட்சியில் சேர்க்க முடியாது என்ற இபிஎஸ் கருத்து ஏற்கனவே கூறியதே – ஓபிஎஸ் பதில்
அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது புதிய தகவல் அல்ல, ஏற்கனவே கூறப்பட்ட பழைய விஷயமே என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்கியது பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றதாகவும், அவருக்கு அதிமுகவில் இனி இடமில்லை என்றும் நேற்று கூறியிருந்தார்.
இந்த சூழலில், தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து புதிதல்ல; ஏற்கனவே சொல்லப்பட்டதே என்று குறிப்பிட்டார்.