மக்கள் குறைகளை சேகரிக்கும் பெட்டி – தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டணி ஆலோசனைகளுக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும் சென்னை வரவுள்ளார். அவரது இந்த வருகையின் போது, சென்னை அமைந்தக்கரை அய்யாவு மகாலில் நடைபெறவுள்ள மக்கள் குறை தீர்ப்பு பெட்டி என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள சுற்றுப்பயணத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த குழு மாநிலம் முழுவதும் பயணம் செய்து பொதுமக்களிடமிருந்து அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பெறவுள்ளது. இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, பாஜக 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தச் சென்னை வருகையின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகளை இணைப்பதற்கான சந்திப்புகள் நடைபெறக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.