திருக்கோயில் சொத்துகளைக் கவரும் அரசு எப்போது திருந்தும்? – பாஜக தலைவர் கேள்வி
திருக்கோயில் சொத்துகளை திருடும் முறைப்படி செயல்படும் அரசு எப்போது திருந்தும்? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் மேல்நிதி ரூ.40 கோடியில் வணிக வளாகங்களை கட்ட அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்து, திமுக அரசின் கொள்ளையை தடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருக்கோயிலின் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாக குறைக்கப்படுவதை தெய்வக்குற்றமாகக் குறிப்பிடும் அவர், கோயிலை தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்றும், திமுக அரசுக்கு அதற்கு முன் உரிய சவுக்கடியும் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
அறங்காவலர் குழுவில்லாமல் கோயிலை நிர்வகிப்பதில் தொடங்கி, கமிஷன் நோக்கில் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிக்கும் இந்த முறை அரசு, ஆட்சியில் இருக்கும் வரை திருந்துமா என்பது பெரிய கேள்வியாய் இருக்கிறது என்றும், கோயில் சொத்துகள் கோயிலுக்கே என உணராமலும், உண்டியல் தொகையில் வணிக வளாகம் கட்டும் திமுக அரசின் செயல்கள், அதன் பேராசையால் அழிவிற்கு வழிவகுக்கும் என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.