திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டத்திற்கு அருகே, கீரிப்பிள்ளை கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
திருகண்ணமங்கை பகுதியில் வசிக்கும் முத்து என்பவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, கோழியை பிடிக்க வந்த கீரிப்பிள்ளை அவரது மகன் நவீன் (7) கையை கடித்தது.
அப்போது, சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனை கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுப்பியுள்ளனர்.
ரேபிஸ் நோயால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தபோதும், சிறுவன் நள்ளிரவில் உயிரிழந்தார். அதன் பின்னர், உடலை பெற்றோருக்கு ஒப்படைக்காமல், சுகாதார ஆய்வாளர் கண்காணிப்பில் மருத்துவர்கள் நல்லடக்கம் செய்தனர்.