தேர்தலை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வழங்கல்?
ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா மீது புகார்
வரவிருக்கும் தேர்தலை கணக்கில் கொண்டு, ராமநாதபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குள் வரும் ராமேஸ்வரம் பகுதியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவரது பெயர் பொறிக்கப்பட்ட சில்வர் பாத்திரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக நிர்வாகிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.