அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை மலர்தூவி வரவேற்ற பாஜகவினர்
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் ஜோலார்பேட்டை விரைவு ரயிலை, பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஜோலார்பேட்டை வரையிலான ரயில், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் தங்கி செல்ல வேண்டுமென அப்பகுதி மக்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை எழுப்பியிருந்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகனின் முயற்சியின் விளைவாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை விரைவு ரயில் நின்று செல்லும் உத்தரவை வெளியிட்டார்.
இதன் பிறகு, அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாஜகவினர் மலர்தூவி வரவேற்றனர்.
ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் சால்வை போர்த்தி மரியாதை செலுத்தி, இனிப்பும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்