திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பிப்ரவரி 2-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம்
திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி 2-ந் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது என, பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவித்துள்ளார்.
நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் தலைமை வகித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு பட்டியல் இன மக்களின் நலன்களை புறக்கணித்து, அவர்களுக்கு துரோகம் செய்து வருவதாக கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல், திருமாவளவன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆதரித்து பேசுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார். இதனை கண்டித்து, பிப்ரவரி 2-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும், வரும் மார்ச் 1-ந் தேதி பாஜக சார்பில் மாநில அளவிலான பட்டியல் அணி மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.