ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரையா? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்
மதுரை மாநகரில் ஒரே நாளில் நிகழ்ந்த இரு கடுமையான குற்றச் சம்பவங்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியை ஒட்டிய சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள், இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடைபெற்றதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில், 5 பேர் கொண்ட மர்ம கும்பல், 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரு சம்பவங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்குள், ஒரே நாளில் நடந்த இந்த இரண்டு குற்றச் சம்பவங்கள்,
மதுரையில் சட்டம்–ஒழுங்கு நிலை சீர்குலைந்து வருகிறதா?
என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய,
காவல்துறை மற்றும் நிர்வாகம் உடனடி, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.