“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்கள் இன்று வறுமையில் வாடி வருவதாகவும், அவர்களுக்கு திமுக அரசு உரிய சலுகைகளையும் கவனத்தையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சியில் உயிரிழந்த தியாகிகளை, அதே காங்கிரசுடன் இணைந்து திமுக இன்று கொண்டாடுவது முரணான அரசியல் நிலைப்பாடு என்றும் விமர்சித்தார்.
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் மொழிப்போர் தியாகிகளின் குடும்பங்களுக்கு உரிய மரியாதையும், கௌரவமும் வழங்கப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் உறுதி அளித்தார்.
இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.