கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா – பாஸ் வழங்கலில் முறைகேடு குற்றச்சாட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், விழாவுக்கான பாஸ் வழங்கலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கோயிலில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதற்கு முன்பாக, விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் வழங்கலில் பாரபட்சம் காட்டப்பட்டதாக கூறி மண்டக படிகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசியவர்கள், கோயிலுக்கு நன்கொடை வழங்கிய பலருக்கு பாஸ் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் உறவினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் கோயில் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது