தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் – அதிகாரபூர்வ அறிவிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளில் பணியாற்றும் 33 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறையில் சிறப்பான சேவையை வழங்கியதற்காக,
ஐஜி மகேஸ்வரி,
எஸ்பி அன்வர் பாஷா,
டிஎஸ்பி குமாரவேலு
ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
அதேபோல், சீர்திருத்தப் பணித் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக தலைமை வார்டர் சேதுராமன் மற்றும் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் கோதண்ட ராம் சிந்தா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தமிழக காவல்துறையில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய 21 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு
“தகைசால் பணிக்கான விருது” வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது