குடியரசு தின விழா ஏற்பாடுகள் – மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்கள் ‘சிவப்பு மண்டலம்’
வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே 77-வது குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, குடியரசு தினத்தன்று சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்க விட கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெரினா கடற்கரை பகுதி, மக்கள் பவன் சுற்றுவட்டாரம், முதலமைச்சர் இல்லத்திலிருந்து மெரினாவிற்கு செல்லும் முக்கிய பாதைகள் அனைத்தும் ‘சிவப்பு மண்டலம்’ என அறிவிக்கப்பட்டு, அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.